கம்பஹாவிலிருந்து நுவரெலியா வரை பரவியதா கொரோனா..? - விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டதை அடுத்து இன்றைய தினம் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் விடுமுறையில் தத்தம் பிரதேசங்களுக்குச் சென்றுள்ளனர். அவர்களை சுயதனிமைப்படுத்தும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, கண்டி ,நுவரெலியா,மாத்தளை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 17 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஊடாக, இவர்களோடு நெருங்கிப் பழகியவர்களை இனங்காணும் பொருட்டு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய இரு பெண்களை யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் 20பேர் சுய தனிமைக்குள்ளானமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.