நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 74 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 5,244 ஆக உயர்வடைந்துள்ளது.

  • 46 - மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியோர்.
  • 22 - தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளோர்.
  • 03 - ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து நாடு திரும்பியோர்.
  • அது தவிர மேலும் மூவர்

மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப்பரவல் மூலம் இதுவரை 1,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா தொற்றுக்குள்ளான 23 நபர்கள் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளமையினால், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 3,380 ஆக உள்ளது.

அதேநேரம் 1,845 கொவிட்-19 தொற்று சந்தேக நபர்கள் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.