நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நாட்டில் நேற்றைய தினம் 309 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தின் 22 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய, 22 பேருக்கும், பேலியகொடை மீன்சந்தையின் 188 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய 75 பேருக்கும், தனிமைப்படுத்தலில் இருந்த 2 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதேவேளை, இலங்கையில் 14 ஆவது கொவிட் 19 மரணம் நேற்று சம்பவித்தது.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமானதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை சுங்கத்திணைக்களத்தில் கடமையாற்றும் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதனால் கொழும்பு துறைமுகத்தின் பொருள் கொள்வனவு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கபிரிவின் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரட்ன இதனை தெரிவித்தார்.

அதேநேரம், பேலியகொடை புளுகஹ சந்தியில் உள்ள சொகுசு வாகனம் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றவர்கள் உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்களிடம் சென்று பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வழக்கு நிறைவடைந்த பின்னர் பானந்துறை நீதவான் நீதிமன்றில் ஒரே போத்தலில் பாணந்துறை - தெற்கு காவற்துறை சார்ஜன்ட் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியின் அதிகாரி ஆகியோர் நீர் அருந்தியுள்ளனர்.

இந்தநிலையில், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவதற்கு பாணந்துறை நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 60 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.