கொரோனா தொற்றாளர்களுகக்கும் பொது மக்களுக்கும் மற்றுமோர் புதிய அறிவிப்பு...!

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் உள்ள வீடுகளில், சுகாதார அதிகாரிகளின் அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, மற்றுமொரு அறிவித்தலையும் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

இந்த அறிவித்தலுக்கு அமைய, குறித்த விடுகளில் தங்கியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாது என்பதுடன், வெளி நபர்கள் அந்த வீடுகளுக்கு செல்ல முடியாது என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிவித்தலில், குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலாளர், காவல்துறை பொறுப்பதிகாரி, கிராம சேவகர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களும், குறித்த பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் இருப்பராயாயின் அவரின் தொடர்பு இலக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவ்வாறான நிலையில், தங்களுக்கு அவசிய தேவை ஏற்படும் நபர்கள் இந்த இலக்கங்களைத் தொடர்புகொண்டு, தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வைத்தியசாலைக்கு செல்வது தவிர்ந்த, ஏனைய எந்தவொரு அவசர சந்தர்ப்பம் ஏற்படும் சமயத்திலும், அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும்.

எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர், இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறை பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.