நாட்டில் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி

நாட்டில் நேற்றைய தினம் 29 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுளளனர்.

இதனால் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,488 ஆக பதிவாகியுள்ளது.

மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையானது தற்போது 1,053 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் மினுவாங்கொடை கொத்தணி பரவலுடன் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர். ‍மேலும் 18 பேர் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் ஆவர்.

அதேநேரம் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த 10 பேருக்கும் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வருகை தந்த ஏழு பேரும், ஈரானிலிருந்து வருகை தந்த இருவம், குவைத்திலிருந்து வருகை தந்த ஒருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டனர்.

மொத்தம் 1,197 கொரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 3,278 நபர்கள் குணமடைந்தும் உள்ளனர்.

இது தவிர கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 289 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.