நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

மன்னார் மாவட்டம் பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் குறித்த பகுதிகளுக்குள் உட்பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

மன்னார் ஆயர் இல்லம் அமைந்துள்ள பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புடையவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.