இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் !

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 194 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 80 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 114 பேர் ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 38 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 11 பேர் குணமடைந்த நிலையில், நேற்றைய தினம் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை மூவாயிரத்து 328 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான ஆயிரத்து 697 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 3 இலட்சத்து 42 ஆயிரத்து 343 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த 7 நாட்களில் மாத்திரம் 43 ஆயிரத்து 842 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், நாளொன்றுக்கு சராசரியாக 6 ஆயிரத்துக்கும் அதிகமான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.