இலங்கையில் சமூகமட்டத்தில் பரவிய கொரோனா...! சற்றுமுன் வெளியான செய்தி

திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கம்பஹா மருத்துவமனையின் 15 ஊழிகயர்கள் மற்றும் குறித்த பெண் பணிபுரிந்து வந்துள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40 உறுப்பினர்கள் அவர்களது வீடுகளிலேயே தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது குறித்த பெண்ணுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவருடன் தொடர்பை பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள PCR பரிசோதனை அறிக்கையை தொடர்ந்தே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும், சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து செயற்படுமாறும் சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.