நீதிமன்றின் பரிந்துரைக்கு அமைய கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை...!

உத்தியோகப்பூர்வமான முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிடியாணை ஒன்றை பெற்றுக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் காவல் துறைமா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்த நிலையில் குறித்த பணிப்புரைக்கு அமைய பிடியாணையை பெற்றுக்கொள்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றிற்கு சென்ற சந்தர்ப்பத்தில், பொது சொத்துக்கள் சடத்திற்கு அமைவாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை கைது செய்ய பிடியாணை அவசியமற்றது என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை பிடியாணை இன்றி கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என சட்ட மா அதிபரின் செய்தி தொடர்பாளர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.