பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவின் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி பெலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 7 பேருக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் சார்ஜென்ட்-அட்-ஆர்ம்ஸ் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, பிரதான பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வேலை செய்யவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.