நாட்டின் பல பாகங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான விபரம்.

மினுவாங்கொடை தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர்களில் 09 ஊழியர்கள் விடுமுறைக்காக சென்றிருந்த நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, குருநாகலைப் பகுதியைச் சேர்ந்த இருவர், மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மினுவாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரும், விடுமுறைக்காக சென்றிருந்த நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மினுவாங்கொடை தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், குறித்த ஆடைத் தொழிற்சாலையிலிருந்து இறுதியாக அடையாளங் காணப்பட்ட 23 பேரின் விபரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த 13 பேர், கட்டான, சீதுவ, மஹர மற்றும் ஜாஎல பகுதிகளில் இருந்து தலா ஒவ்வொருவர், மீரிகமையிலிருந்து மூவர் மற்றும் திவுலப்பிட்டியவிலிருந்து இருவரும் இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர். 

திவுலபிடிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் மற்றும் அவரது 16 வயதான மகள் ஆகிய இருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

மினுவாங்கொடை தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் திவுலப்பிட்டியப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு, முதலில் இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது

இந்த நிலையில், அவருடன் தொடர்பினை வைத்திருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில், முதலில் அவரது 16 வயதான மகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, பல்வேறு தரப்பினரடமும் தொடர்ந்தும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.