ஹற்றன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து ஹற்றன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

ஹட்டன் பகுதியில் ஏழு பேரும் எபோஸ்லி பகுதியில் 03 பேருமாக மொத்தம் 10 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

ஹட்டன் மீன் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதனை தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகிய 25 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே, குறித்த பகுதி இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களுடன் தொடர்புடைய 200இற்கும் மேற்பட்டோர், தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.