நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான தற்போதைய நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 368 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து தொள்ளாயிரத்து 58 ஆக காணப்படுகின்றது.

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 70 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்றைய தினம் வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 714 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், 3 ஆயிரத்து 792 பேர் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 178 பேர் நேற்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வவுனியா மற்றும் இரனைமடு ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கபட்டிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் குறித்த 178 பேரும் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இவர்களுள் 33 ஆயிரம் பேர் பொது சுகாதார பரிசோதகர்களினால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து நாடாளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 7 ஆயிரத்து 128 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள 56 ஆயிரத்து 302 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாய நிலை தொடர்ந்தும் நீடிப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே குருணாகல், புத்தளம், கேகாலை, கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை மற்றும் கம்பஹா ஆகிய 13 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பதற்காக ஆயிரத்து 650 பொது சுகாதார பரிசோதகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.