சற்றுமுன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மினுவாங்கொடை பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 5 பேரும், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய 12 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 29 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.