கம்பளையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

கம்பளை, மில்லகாமுல கொனட்டுவெவ பிரதேசத்தில் நேற்று மேலும் மூன்று சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கொனட்டுவெவ பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டு அங்கு வசித்து வரும் 428 குடும்பங்களை சேர்ந்த 2500 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பன்வில தென் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் பிரதீப் நவரட்ணம் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சிறார்களை உரிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேற்படி பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்கும் திங்கட்கிழமை மற்றுமொருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேற்படி நபர்களுடன் நெருங்கிப் பழகிய 48 பேரிடம் கடந்த 19ஆம் திகதி PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, அதன் அறிக்கைகள் நேற்று வெளியானது.

இதன் போது மேற்குறிப்பிடப்பட்ட இரு தொற்றாளர்களில் ஒருவருடைய பிள்ளைகளான மூன்று சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கொனட்டுவெவயைச் சேர்ந்த இருவரும் வெயாங்கொட எலுவாபிட்டிய பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் வேலைசெய்து சந்தர்ப்பத்தில் அங்கிருந்த விகாராதிபதி உற்பட நான்கு பிக்குமார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த இருவரும் கடந்த 3 ஆம் திகதி அங்கிருந்து சுகாதார அதிகாரிகளுக்கு தெரியாமல் கொனட்டுவெவ கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவர் தொடர்பாக பன்வில தென் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவுக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடந்த 16ஆம் திகதி இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளிலிருந்தே கடந்த 18 ஆம் திகதி ஒருவருக்கும் 19 ஆம் திகதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கம்பளை பிரதேசத்தில் உட கல்பாய, உலப்பனை சாக்கம்மான, ஜயமாலப்புர, புபுரஸ்ஸ லெவலன் கொனட்டுவெல நால்வருடன் சேர்ந்து 9 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.