கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளும் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பரிசோதனைக்காக அனுப்பப்படும் மாதிரிகளின் அதிகரிப்பு மற்றும் இயந்திரங்களில் காணப்படும் கோளாறுகள் காரணமாக பீசீஆர் அறிக்கை வெளியிடுவதற்கு தாமதம் ஏற்படுவாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் தெரிவித்துள்ளார். எனினும் பீசீஆர் பரிசோதனைகள் ஒரு போதும் நிறுத்தப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு இயந்திரம் பழுதடைந்துள்ளது. அதனை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் 10 மணித்தியாலங்களின் பின்னர் இயந்திரத்தின் தொழில்நுட்ப பிரச்சினையை கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது பத்தாயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளுடன் ஒப்பிடும் பத்தாயிரம் நோயாளர்களை கடந்த நாடுகளில் பாரிய அளவில் நோய் தொற்று மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
மக்கள் சற்று அவதானமற்ற முறையில் செயற்பட்டாலும் நாட்டில் பாரிய உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உலகளவில் ஒப்பிடும் போது எங்களால் கட்டுப்படுத்த கூடிய சிறிய வாய்ப்புகள் உள்ளமை குறித்து மாத்திரமே மகிழ்ச்சியடையலாம்.
பயண கட்டுப்பாடுகள் மேற்கொண்டு, அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment