நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 105 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் பணியாளர்கள் இரண்டு பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய மேலும் 101 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானது.

இந்தநிலையில், திவுலுப்பிட்டிய கொத்தணியில் பதிவான கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 628 ஆகும்.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 210 பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 5 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்ட குறித்த 5 பேரும், நேற்று முன்தினம் கொரோனா நோயாளியாக மன்னாரில் அடையாளம் காணப்பட்ட கட்டிட நிர்மாண பணியாளருடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.விநோதன் இதனை தெரிவித்தார்.

நேற்றைய முன்தினம் மன்னாரில் தொற்றுறுதியான குறித்த கட்டிட பணியாளருடன் நேரடி தொடர்பினை கொண்டிருந்த 42 பேரில் 38 பேரின் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.

அவற்றில் 27 மாதிரிகள் யாழ்பாண மருத்துவமனை ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 5 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.விநோதன் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.