நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 202 பேருக்கு தொற்றுறுதியானதை அடுத்து, அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 459 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் தொற்றுதியான, வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 5 பேர் இந்த எண்ணிக்கையில் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய, வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து நேற்று 8 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொவிட் 19 நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட பெரிய கொத்தணியாக மினுவாங்கொடை - ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கந்தகாடு முகாம் மற்றும் சேறுவில கடற்படை முகாம் என்பன அதிகபடியான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொத்தணிகளாக இருந்தன.

இந்த நிலையில், ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் பதிவாகும் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.