நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா? தொற்று நோய்ப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்து அடுத்து வரும் நாட்களில் தீர்மானிக்கப்படும் என தொற்று நோய்ப் பிரிவு அறிவித்துள்ளது.

கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 321 பேருக்கு இதுவரை தொற்று ஏற்பட்டமை  உறுதி செய்யப்பட்டதாக தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இந்நிலையில், ஆடைத் தொழிற்சாலையில் அந்தப் பெண்ணுடன் தொழில் புரிந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் காணப்படும் நிலவரங்களின் அடிப்படையிலேயே நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்படுமா? என்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.