முன்னாள் அமைச்சரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்குமாறு CID விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிவான் நிராகரித்துள்ளார்
நீதிமன்றப் பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கை போக்கு வரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில், இடம்பெயர்ந்து வாழும் மக்களை வாக்களிப்பதற்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை காரணமாகவே சட்டமா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment