நாட்டில் நேற்றைய தினத்தில் ஆறு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அமெரிக்காவில், குவைட், ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒவ்வொருவருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த 3 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 388 ஆக உயர்வடைந்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment