அம்பாறையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறைபெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்ற இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இரு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் முகக்கவசம் சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் மக்கள் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

தற்போது கல்முனை பிராந்தியத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 32 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் வீடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம். சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் செல்ல வேண்டாமெனவும் இதனை உதாசீனம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிமாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்துக்கு வருபவர்கள் தொடர்பாக அறிவிக்குமாறும் கேட்டுள்ள, அவர் பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தைகள் வணக்கஸ்தலங்கள் ஆகிவற்றில் சுகாதார நடைமுறைகளைப் பேணுமாறும் கேட்டுள்ளார்.

இதே வேளை கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்ற இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு மற்றுமொரு பஸ் நடத்துநரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பகுதியினர் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.