நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் வெளியானது.

நாள் ஒன்றினுள் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட தினமாக நேற்றைய தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 866 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் அவர்களுள் 865 பேர் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொற்றாளர்களுள் 535 பேர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் 20 ​பேர் பேருவலை மீன்பிடி துறைமுகத்தையும், 5 பேர் காலி மீன்பிடி துறைமுகத்தையும் 48 பேர் தனிமைப்படுத்தலிலும், ஏனைய 257 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட கொத்தணியின் தொற்றாளர்கள், வெல்லம்பிட்டிய, மாகேல, கொட்டஞ்சேனை, பம்பலபிட்டிய, ஹோகந்தர, மட்டக்குளிய, கொலன்னாவ, களனி, பேலியகொட, அங்கொட, கொழும்பு கோட்டை, கடவத்த, வத்தள, கொதட்டுவ, தெமடகொட, கலேவல, உஸ்வெட்டகொய்யாவ, மத்துகம, கிரான்பாஸ், புளத்சிங்கல, அக்குரஸ்ஸ, மோதர, மருதானை, மாளிகாவத்த, நுகேகொட, மஸ்கெலிய, கொள்ளுபிட்டிய, கொச்சிக்கடை, ஹெய்யன்துடுவ, புதுக்கடை, ஜாஎல, மொரட்டுவ, கடுவல, சிலாபம், பஸ்ஸர மற்றும் ஒருகொடவத்த பகுதிகளை சேர்ந்தவர்கள்.

அத்துடன் லுணுகம்வெஹர, வடதகொட, ராகம, அவிஸ்ஸாவெல்ல, பானந்துறை, நீர்கொழும்பு, வேபட, பொரள்ள, ஜிந்துபிட்டிய, தங்கொட்டுவ, பலபிட்டிய, இம்புல்கொட, ஹோமாகம, கம்பொள, கல்கிஸ்ஸ, சீதுவ, மாத்தறை, ஊரகமுவ, தெல்தெனிய, பண்டாரவெல, கிருலப்பனை, ஹிக்கடுவ, ராஜகிரிய, கோனவல, ஹுனுபிட்டிய, பெலிஅத்த, பரதஸ்கொட, களுத்துறை, மத்தேகொட, கிரில்லவல, ஒலியமுல்ல, உடுகம, பொகவந்தலாவ, எட்டபொட, இமதுவ, வவுனியா, குருணாகல, பல்லேவல, மஹர, பத்தரமுல்ல, மாலபோ, மொனராகல, நாவலபிட்டிய, சேதவத்த, நாரஹேன்பிட்ட, நாவல, மினவங்கொட, திவுலுபிட்டிய, மீரிகம, தெல்கொட, கணவத்த மற்றும் உடுபிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.