தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த விசேட வர்த்தமானியில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்றையதினம் கையெழுத்திட்டிருந்தார்.
இதன்படி, குறித்த விசேட வர்த்தமானியில் பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதாரப் பாதுகாப்பு முறைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, புதிய வர்த்தமானியின் படி, சட்டங்களை மீறும் நபர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாது அபராதம் விதிக்கவும், ஆறு மாத கால சிறைத் தண்டனை விதிக்கவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்கு செல்லும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment