நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் நேற்றைய தினம் 180 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 120 பேர் மினுவாங்கொடை பிரேண்டிக்ஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் 37 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் 83 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்து.

அத்துடன் 35 பேர் கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் எனவும், 25 பேர் அவர்களுடன் தொடர்புடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு - கோட்டை காவல் நிலைய காவல்துறை பரிசோதகர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அவருடன் தொடர்பினை பேணியவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு கப்பல் தளத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், தெற்றுறுதியானவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தென் அதிவேக மார்க்கத்தில் கொழும்பில் இருந்து மத்துகவிற்கு பயணித்த சொகுசு பேருந்தின் நடத்துனருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து அதில் பயணம் செய்த 25 பேருக்கு இதுவரையில் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குளியாபிட்டி, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய, நாரம்மல ஆகிய காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் காவற்துறை ஊரடங்கு சட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கையை கருத்திக் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் 19 காவல்துறை அதிகார பிரதேசங்களில் காவல்துறை ஊடரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.