கொரோனா வைரஸ் தொற்றானது நாட்டில் இன்னும் சமூக பரவலை ஏற்படுத்தவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சமூக பரவல் என்பது நான்காம் நிலையாகும் என்பதுடன், தற்போது கண்டறியப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றுறுதியானவர்களுக்கு இடையில் தொடர்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே இது சமூக பரவலாக கருதப்பட மாட்டாது எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அத்துடன் கொரேனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட்டு பாதுகாப்பாக இருப்பது அனைவரினதும் கடமையாகும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.
Post a Comment