பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட கோரிக்கை!

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு சுகாதார பரிந்துரைகளை கோரியுள்ளது.

பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை எழுத்துமூலம் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இணையத்தளம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளது.

இணையத்தள வசதிகளற்ற மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளாவிய ரீதியில் 10 ஆயிரத்து 164 பாடசாலைகளில் சுமார் 4 தசம் 5 மில்லியன் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.