கிரேக்க தீவான சமோஸின் வடக்கேயும், துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 7.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நில அதிர்வானது, இஸ்தான்பூல் மற்றும் எதேன்ஸ் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் பாரிய சேதங்கள் ஏற்ப்பட்டுள்ளதுடன், உயிர்சேதங்கள் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்,துருக்கியின் – இஸ்மிர் பகுதியில் 1999 ஆண்டு ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 17000 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment