மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு ஓர் நற்செய்தி

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்த்து அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக பல கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோரை சந்தித்து இந்த நியமனத்தை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் நாளை மத்திய மாகாணத்திலுள்ள 435 உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.