நாட்டின் எந்தப் பகுதியிலாவது கொரோனா அபாயம் காணப்படின் குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக கண்டறியப்படும் பகுதிகளை அதிக அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தவுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அதிக அபாய வலயங்களிலேயே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கம்பஹா கட்டுநாயக்க மற்றும் மினுவங்கொடை ஆகிய பகுதிகளிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.
Post a Comment