பொது விடுதிகளில் தங்கியிருந்து பணிபுரிவோருக்கு முக்கிய அறிவிப்பு

பொது விடுதிகளில் தங்கி பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருபவர்கள் இது குறித்து தமது நிறுவனத்தின் பிரதானியிடம் அறிவிக்க வேண்டியது அவசியமென இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியில் இதுவும் ஒன்றென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 45 சதவீதமானோர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் இருந்து நேற்றைய தினத்தில் மாத்திரம் 194 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.