உயர்தர பரீட்சை கடமையில் ஈடுபட்டு வந்த இரண்டு ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

உயர் தரப் பரீட்சை நடைபெறும் கம்பஹா பிரதேசத்தின் பாடசாலை ஒன்றின் பரீட்சை மண்டபத்தின் பெண் மேற்பார்வையாளர் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு கோவிட்19 பி.சி.ஆர். பரிசோதனையின் போது தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளததாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இம்புல்கொட பகுதியில் வசிக்கும் இந்த ஆசிரியை இருபிள்ளைகளின் தாய் என்பதோடு அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட அறிகுறிகள் காரணமாக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாககும்., அதனடிப்படையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் மீன் கொள்வனவுக்காக பேலியகொட மீன் சந்தைக்குச் சென்றுவந்துள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிாகரி சுபாஷ் சுபாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த ஆசிரியை மேற்பார்வை செய்த மண்டபத்தில் பரீட்சை எழுதிய மாணவர்கள் 40 பேர் தொடர்பான தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்குவதற்கு கம்பஹா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கே. மல்லவராச்சி நடவடிக்கை எடுத்துகள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதோடு, ஆசிரியையும் அவரது கணவரும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.