கண்டி ஆடை விற்பனை நிலையத்தில் மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் இருவர் பலி!

கண்டிலுள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றின் மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (16) இடம்பெற்றுள்ளது.

கட்டிட திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த கொண்டிருந்த இரு மேசன் தொழிலாளர்களே உயிரிழந்தவர்களாவர்.

இவர்களில் ஒருவர் கண்டி ஒகஸ்டாவத்தை என்ற இடத்தைச் சேர்ந்த ஏ.ஜி. அரவிந்த (54) என்றும் மற்றையவர் கட்டுகஸ்தோட்டை, உடுவாவெல பிரதேசத்தைச் சேர்ந்த உபாலி ஜெயரத்ன (57) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.