இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படைப் பிரிவின் விசேட குழுக்கள் கொழும்பு முழுதும் விசேட ரோந்துப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு முழுதும் எழுமாறான உடல் உஷ்ண பரிசோதனைகளை இந்த இராணுவ மோட்டார் சைக்கிள் குழு முன்னெடுத்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் விசேட ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குழுக்களில் ஒரு குழு ராஜகிரிய பகுதியிலும் மேலும் இரு குழுக்கள் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு உஷ்ண பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக சமூகத்தில் கொரோனா அறிகுறிகளுடன் நடமாடும் தொற்றார்களை கண்டறிய இந்த நடை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment