மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பொது மக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாகம் சி.கே. அழகக்கோண் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கொவிட் 19 வைரஸ் காரணமாக நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைக்கு மத்தியில் நாளை (07) மற்றும் 8, 9 ஆம் திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகம் மற்றும் வேரஹெர அலுவலகம் பொதுமக்களுக்காக திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக பொதுமக்கள் ஏதேனும் சிரமங்களுக்கு உள்ளாகுவீர்களாயின் அது தொடர்பில் வருந்துவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.