களனிப் பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடையைச் சேர்ந்த இம்மாணவி, சமூகவியல் பீடத்தின் புள்ளிவிபரவியல் பிரிவில் கல்வி கற்றுறுவந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாணவியின் தந்தை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் எனவும் அத்தந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் களனி பல்கலைக்கழகத்தின் ஊடகப் பணிப்பாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இப்பல்கலைக்கழகத்தின் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் குறித்து நாளை திங்கட்கிழமை தீர்மானிக்கப்டும் என உபவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.
Post a Comment