கம்பளையில் இதுவரை 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; அச்சத்தில் மக்கள்.

கம்பளை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இனம் காணப்பட்ட ஐந்தாவது கொரோனா தொற்றாளரும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை பின்பற்றாமல் நடந்து கொண்டமையால் 30 வீடுகளில் வசிப்போர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த நபருடன் தொடர்புகளை பேணியோரை கண்டறியும் நடவடிக்கையிலும் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் 

கம்பளை மில்லகாமுல கொனட்டுவெவ கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கொரோனா தொற்றாளரிடம் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது... 

கட்டிட தொழிலாளியான குறித்த நபர் வெயாங்கொட பிரதேசத்தில் பௌத்த விகாரை ஒன்றில் வேலைசெய்து வந்ததாகவும் அங்கு விகாராதிபதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த 3 ஆம் திகதி ஊருக்குவந்ததாகவும் இதன் போது கடந்த 15 நாட்களில் பல தடவைகள் கம்பளை நகருக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்துள்ளமையும் மேலும் கொனட்டுவெவ கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 30 வீடுகளுக்கு போய் வந்தமையும் தெரிய வந்துள்ளது 

இதையடுத்து சுகாதார பிரிவினர் குறித்த நபருடன் தொடர்புகளை பேணியவர்களை இனம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.