தனது 72 வயது வயோதிப தாயினை வைத்திய சாலையிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்ல மூன்று பிள்ளைகளும் மறுத்து வருவதினால் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வைத்திய சாலையில் இருந்து வருவதாக நாவலப்பிட்டி வைத்திய சாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
நாவலப்பிட்டி பௌவாகம பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 72 வயது குறித்த வயோதிபப் பெண்ணின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரின் பிள்ளைகள் நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதித்து விட்டுச் சென்றுள்ளனர்.
எனினும் குறித்த பெண்ணின் காயங்கள் குணமாகி நீண்ட நாள் கடந்தும் நல்ல வசதியுடன் இருப்பதாக கூறப்படும் அவரின் மூன்று பிள்ளைகளும் தாயினை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல மறுத்து வருவதினால் கடந்த நான்கு மாதங்களாக வைத்திய சாலையில் இருந்து வருவதாகவும் எனினும் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணாமாக குறித்த பெண்ணை தொடர்ந்து பராமறிப்பது சிரமமான காரியம் எனவும் வைத்திய வைத்திய சாலை நிர்விகத்தினர் தெரிவிக்கின்றனர்.
Post a Comment