துயரத்தில் வாடும் பெற்றோர் - 3 மாத குழந்தைக்கும் கொரோனா..!

களுத்துறை – மத்துகமை, வலல்லாவிட பகுதியில் 3 மாதக் கைக்குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் மாமி முறை உறவினரால் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், குறித்த குழந்தையின் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.