கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 24 பகுதிகளிலும் கொரோனா

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத 16 பிரதேசங்களில் கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

இதேவேளை சீதுவ பிரதேசத்தில் ஒரே விடுதியில் 42 தொற்றாளர்கள் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை இனங்காணப்பட்ட மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடைய 194 தொற்றாளர்களில் 80 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ளவர்களாவர்.

ஏனைய 114 பேர் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோராவர். இவற்றில் குறிப்பிடத்தக்க விடயம் இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் பெருமளவானோர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாத பிரதேசங்களிலுள்ளவர்களாவர்.

அதற்கமைய சீதுவ பிரதேசத்தில் 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு அவர்கள் அனைவரும் ஒரே விடுதியில் தங்கியிருப்பவர்களாவர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்படாத பிரதேசங்களான ஹொரண, அநுராதபுரம், றாகமை, கனேமுல்ல, கிரிந்திவெல, இரத்தினபுரி, களுத்துறை, சீதுவ, கொழும்பு, குருணாகல், பொலன்னறுவை, நீர்கொழும்பு, இரத்மலானை, நுகேகொடை, கடுவெல மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போது குறித்த நபர்கள் வழங்கிய முகவரிகளின் அடிப்படையிலேயே இவர்கள் இனங்காணப்பட்டனர்.

எனினும் இவர்கள் தொழில் நிமித்தம் வெவ்வேறு பிரதேசங்களில் தங்கி தொழிற்புரிபவர்களாகவுள்ளனர். இவ்வாறான சிலர் பிழையான முகவரிகளை வழங்கியுள்ளனர்.

முகவரிகள் பிழையானவையாக இருக்கும் போது தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் இனங்காண்பதில் எமக்கு நெருக்கடி ஏற்படும். எனவே தொழில் புரியும் பிரதேசங்களில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் சரியான முகவரியை தொழில் நிறுவனத்திடம் வழங்குமாறு கோருகின்றோம்.

காரணம் இவ்வாறானவர்களிடமிருந்து விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கும் தொழில்புரிகின்ற இடத்திலுள்ளவர்களுக்கும் தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதற்காகும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.