மேலும் 220 பேர் அடையாளம்- சற்றுமுன் வெளியான செய்தி

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா-திவுலபிடிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட 39 வயதுடைய பெண்ணுக்கு, அவர் பணியாற்றும் தொழிற்சாலைக்குள் வைத்தே கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் அவரது 16 வயது மகள் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவரது கணவர் மற்றும் ஏனைய மூன்று பிள்ளைகளும் தற்போது காலி-ஹபராதுவ காவல்துறை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தலில் உள்ள குறித்த பெண்ணின் கணவன் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தனது மனைவிக்கு ஆடைத் தொழிற்சாலையைத் தவிர வேறு எந்தவொரு இடத்தில் வைத்தும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், திவுலபிடிய பகுதியில் கொரோனா பரவல் எங்கிருந்து ஆரம்பமானது என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

குறித்த பெண் பயணம் செய்த பேருந்துகள் தொடர்பான விபரங்களை அவர் வெளியிட்டார்.

கோரோனா பாதித்த புங்குடுதீவுப் பெண் கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து, புத்தளம் பகுதியில் பழுதடைந்துள்ளது. அதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 புத்தளம் பகுதியிலிருந்து அந்தப் பெண் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்துள்ளார். அவர் கொடிகாமத்தில் காலை 4.30 இறங்கிவிடப்பட்டுள்ளார்.

பின்னர் வேறொரு பேருந்தில் அந்தப் பெண் யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்துள்ளார்.

கொழும்பு - பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பணியாற்றிய நடத்துனர் மற்றும் நடத்துனர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு சுயதனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்கள் உடனடியாக வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.