இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரை 19 பேர் மரணித்துள்ள நிலையில், இன்று மரணித்த 19 வயது இளைஞனின் ஜனாஸா இன்று மாலை பொரளை, கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, வாழைத்தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட 19 வயதான அங்கவீனமான மொஹமட் மின்ஹாஜ் எனும் இளைஞனே இவ்வாறு மரணித்தவராவார்.
இதனை முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று கொரோனாவால் மரணித்ததாக கூறப்படும் 19 வயது அங்கவீனமான இளைஞன் வீட்டிலேயே இருந்துள்ளார். அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்பது புதிராக உள்ளது என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.
Post a Comment