மினுவங்கொடையில் மேலும் 14 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் மினுவங்கொடை தொழிற்சாலையின் தொழிலாளர் எனவும் ஏனைய 13 பேரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இதுவரை மினுவங்கொடை கொவிட் 19 கொத்தணியில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1073 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment