சற்றுமுன் நாட்டில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும், 124 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய தினத்தில் மாத்திரம் 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 830 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 252 ஆக காணப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.