நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 342 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment