நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதன் நிமித்தம் எதிர்வரும் 07 நாட்கள் சவாலான நாட்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
சகோதர செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 07 நாட்களுக்கு பொது மக்கள் மிக அவாதனமாக செயற்பட வேண்டும் என்பதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலான நிலையை கட்டுப்படுத்துவது எவ்வாறு அதற்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டங்கள் என்பன குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Post a Comment