கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் தொடர்பில் வெளியான செய்தி

நாட்டில் நேற்றைய தினம் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய 2 பேரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்த இந்திய கடலோடி ஒருவரும், செங்கடலில் இருந்து வந்த கடலோடி ஒருவருக்கும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 9 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றுறுதியான 128 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்ற நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியாகி மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

வேலைநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

அவர்களில் 50 வீதமானர்கள் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் ரூபா வீதம் வழங்குவதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பணியகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் உதவி முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.