மருத்துவர் ஷாபி விவகாரம் பாராளுமன்றத்தில் ஆவேசப்பட்டு அடங்கிய அலி சப்ரி; சபையில் சலசலப்பு!

மகப்பேற்று மருத்துவர் ஷாபியின் மீதான தற்போதைய விசாரணைகள் தொடர்பில் எழப்பட்ட கேள்விகளினால் நாடாளுமன்றத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

மருத்துவர் ஷாபியின் வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணிகளின் பெயர்களை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி நீதியமைச்சர் அலி சப்ரியிடம் வினவினார்.

அத்துடன் கடந்த அரசாங்கமே பௌத்த பெரும்பான்மையினர் மத்தியில் மருத்துவர் ஷாபி விவகாரத்தை பூதாகரமாக்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் காணப்படும் வழக்குகளின் சட்டத்தரணிகளின் தகவல்களை வழங்குவது நீதியமைச்சரின் கடமையல்லவெனவும் அது தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டுமாயின் நீதிமன்றத்துக்கு கட்டணம் செலுத்தி அந்த விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் பதிலளித்தார்.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நீதியமைச்சர் அலி சப்ரியின் ஆடை தொடர்பில் வௌியிட்ட கருத்தினால் நாடாளுமன்றத்தில் அமையதின்மை ஏற்பட்டது.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.