அரசாங்கத்திடம் இருந்து ஓர் மகிழ்ச்சியான செய்தி

மலையக மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 4 ஆயிரம் விடுகளை நிர்மாணிக்கும் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் தோட்ட மக்களுக்காக 4,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரையில் 669 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்போது ஏற்படும் நடைமுறை பிரச்சினைகளே, மலையக மக்களுக்கான இந்திய வீடமைப்பு நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கு காரணமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை எமது செய்திச் சேவை தொடர்புகொண்டு வினவியது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.