கல்வி அமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

2018 ஆம் ஆண்டு வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய இந்த வருடத்திற்காக தேசிய கல்வி கலாசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பிலான வர்த்தமானி இன்று பிரசுரிக்கப்படவுள்ளது.

கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் முறைமையினால் மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கமான www.moe.gov.lk க்கு பிரவேசித்து குறித்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பபட வேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 0112787303 . 0112787385 அல்லது 0112787397 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.